“இசையால் வசமாக இதயம் எது?”ன்னு டி.எம்.எஸ் அண்ணாச்சி பாடி வெச்சது ரொம்ப பொருத்தமான ஒண்ணு தான்.ஏன்னா இசையை விரும்பாத மனுஷங்களே இந்த உலகத்துல இருக்க முடியாது.அதிலேயும் ஃநைட்டு தூங்குற நேரத்துல சிஸ்டத்துல கொஞ்சமா சவுண்ட் வெச்சிட்டு ரம்யமான இசையை கேட்குறப்போ அதுல கிடைக்குற சந்தோசமே அலாதியானது தான்.
அதிலேயும் ஆங்கில இசைப்பாடல்கள் ஒரு தனி ரகம் தான். பாப்,டான்ஸ்,ஹிப்ஹாப்ன்னு அதுல பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும்.அதே மாதிரி ஒரு ஆல்பத்துல இருக்குற எல்லா பாட்டும் ஒருத்தருக்கு புடிக்கும்னு சொல்ல முடியாது.சில ஆல்பத்துல அதுல இருக்குற எல்லா பாட்டும் பிடிக்கலாம்,சில ஆல்பத்துல அதுல இருக்குற ஒண்ணு,ரெண்டு பாட்டு மட்டும் பிடிக்கலாம்.
இப்படி நம்மளுக்கு பிடிச்ச பாட்டுகளை மட்டும் தேடி அதை இலவசமா தரவிறக்கம் செய்யிறதுக்குன்னே ஒரு சூப்பரான இணையதளம் இருக்கு.
அந்த இணையதளத்தோட பேரு http://en.dilandau.eu
இந்த இணையதளத்தோட கொள்கையே “இசையை இலவசமா தரவிறக்கம் பண்ணுங்க”ங்கிறது தான். கூகுள் தேடுதளம் மாதிரி பாட்டை தேடுறதுக்குன்னே தளத்தோட நடுவுல ஒரு அடைப்புக்கட்டம் குடுத்துருக்காங்க. இந்த கட்டத்துல நீங்க ஏதாவது ஆர்டிஸ்ட் பேரோ அல்லது ஆல்பத்தோட பேரோ குடுத்தீங்கன்னா போதும்,கட்டத்துல நீங்க ரெண்டு வார்த்தை அடிக்கும் போதே அது சம்பந்தமான பாட்டு வரிகளை முன்னாடியே எடுத்துக்காட்டி நாம தேடி வந்தா வந்தா பாட்டை தேடு குடுத்துடுறாங்க...
உதாரணத்துக்கு கட்டத்துல பிரபல பாப் இசைப் பாடகி rihanna பேரை குடுத்தீகன்னா அடுத்த நொடி அந்த பொண்ணு பாடின எல்லா பாட்டுகளும் உங்க முன்னாடி வந்து நிக்கும்.அதுல உங்களுக்கு புடிச்ச பாட்டுகளை நீங்க தரவிறக்கம் செய்யலாம்,இல்லேன்னா அவுக பாடின ஏதாவது ஒரு பாட்டோட முதல்வரியை குடுத்தீகன்னா கூட போதும் அந்த பாடல் வரியை கண்டுபுடிச்சி உங்களுக்கு குடுக்கும்.நீங்க அந்த பாடலை தரவிறக்கம் செஞ்சிடலாம்.
இதுல இன்னொரு எளிமை என்னன்னா பாட்டோட வரிகளை குடுத்து தேடுறப்போ நமக்கு ஒரே மாதிரி உள்ள வார்த்தைகள் கொண்ட பாட்டுகள் நெறைய வரும்.அதுல நாம தேடின பாட்டு எதுன்னு நமக்கே கொஞ்சம் குழப்பம் வரும்,அப்பவும் நீங்க கவலைப்பட வேணாம்? அந்தந்த பாட்டுக்கு கீழ இருக்குற Listen கட்டத்தை அமுத்தி அது நாம தேடின பாட்டு தானான்னு அந்த பாட்டை கேட்டுட்டு அப்புறமா தரவிறக்கம் செஞ்சிக்கலாம்.
இந்த இணையதளத்துல இருக்குற மத்த மூணு சிறப்பம்சங்கள் என்னன்னா?
# எல்லா பாட்டுகளையும் உலகம் முழுக்க பாப்புலரான,பரவலா இருக்குற MP3 பார்மெட்லேயே தரவிறக்கம் செஞ்சிக்கலாம்
# சம்பந்தப்பட்ட பாட்டை நாம நம்ம மொபைல்ல ரிங்டோனாவும் வெச்சிக்க தனியா தரவிறக்கம் செஞ்சிக்கலாம்,அதுக்கு பாட்டுக்கு கீழே இருக்குற Ringtone அடைப்புக் கட்டத்தை அமுத்தினா போதும். இதுவும் இலவசம் தான்.
# அதேமாதிரி நாம என்ன மொழி பாட்டு தேடினாலும் அது சம்பந்தமான YOUTUBE வீடியோ பாட்டையும் முடிஞ்ச வரைக்கும் நமக்கு தேடி தந்துடுறாங்க.
டிஸ்கி : ஒரே ஒரு சின்ன குறை என்னன்னா இங்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எப்படி எந்த மொழிப்பாட்டு வேனுமுன்னாலும் தரவிறக்கம் செஞ்சிக்கலாம், ஆனா ஆங்கில மொழியில இருக்குற அளவுக்கு நம்ம பிராந்திய மொழிகள்ல அதிகமா பாட்டுகள் இல்ல. மத்தபடி இலவசம்னா முதல் ஆளா முன்னாடி போயி நிக்குற நமக்கு இந்த இணையதளம் ஒரு வரப்பிரசாதம் தான்.
No comments:
Post a Comment