பன்னாட்டுப் பழமொழிகள்
அங்கேரி
- நரகத்தின் கதவுகள் எப்போதும் - திறந்திருக்கின்றன -
நள்ளிரவலுங்கூட
- உன்னை அளவின்றிப் புகழ்கிறவன் ஏற்கனவே உன்னை
ஏமாற்றிவிட்டான் அல்லது ஏமாற்ற விரும்புகிறான்.
- ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான்,
மற்றக் கையால் அணைக்கிறான்
- செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
- உனது கௌரவம் உனது நாக்கின் நுனியில் இருக்கிறது.
- பேராசை முடிகிற இடத்தில் சந்தோசம் தொடங்குகிறது.
- பல சயமங்களில் முப்பத்திரண்டு பற்களும் சேர்ந்து நாக்கை அடக்கமுடிவதில்லை
- பணம் பேசுகிறது, நாய்கள் குரைக்கிறது
- தாயைப் பார்த்து மகளை மணம் செய்!
- கணவன் தலைவன்,மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்
- ஒரு பாவத்தை பலர் செய்தாலும் அது பாவமே
- தங்கப் படுக்கையினால் நோயாளிக்கு என்ன பயன்!
- கடவுளின் கரம் என்றும் திறந்திருக்கின்றது,என்றும் நிறைந்திருக்கிறது
- அயலான் தேவைப்படாத அளவுக்கு யாரும் அவ்வளவு பொிய பணக்கரன் இல்லை
- உன் நண்பனுக்குக் கூட உண்மையைச் சொல்ல மறுக்காதே!
- உன்னை யார் நேசிக்கிறார்களோ, அது ஒரு நாயாக இருந்தாலும்கூட,நீர் அவர்களை நேசிப்பாயாக.
- ஒருவன் நிர்வாணமாக இருக்கும்போது,எழுந்து நிற்பதைவிட உட்கார்ந்திருப்பது மேலானது.
- நாணமில்லாத பெண் உப்பில்லாத உணவு மாதிரி.
- நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி, ஒருவன் அதை தனக்கே செய்கிறான்.
- ஒவ்வொருவனும் தன்னை அறிஞன் என்று நினைக்கின்றான்!
அதனால்தான்உலகில் இத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்.