வலை தளங்கள்

பக்தி கீதம் மென்பொருள் அறிமுகம்


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

ஆங்கில மொழியில் கற்கும் நம்சிறார்களுக்கு இந்துமத வழிபாட்டுப் பாடல்களை ஆங்கில உதவியுடன் கணனி மூலம் கற்றுக் கொடுக்கும் மின்பொருள் பக்தி கீதம்

தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் பாடத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் சங்கீத ஞானம் அறியாதவர்கள் எவராயினும் பக்தி கீதங்களை கற்கவும் பாடவும் அமைந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்துமத தெய்வங்கள் எல்லோருக்குமான வழிபாட்டுப் பாடல்கள் இந்த ஆக்கத்தில் இடம் பெற்றுள்ளமையால் எந்த முறை வழிபாட்டிற்கும் ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புகழ், புராணம், சகலகலாவல்லிமாலை மற்றும் சிவனார், கணபதி, முருகனார், கிருஷ்ணர், அம்மன், ஆகியோரின் தோத்திரப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு www.thamiltheepam.com


மென்பொருள் கற்க உதவும் தளங்கள்- Programming Tutorial Sites:


வரைப்படம் மென்பொருள்களான‌ போட்டாசாப், கோரல்டிரா, ஃப்ளாஷ், வடிவமைத்தலை சேர்ந்த பல மென்பொருள்களில் பாடங்களை ஆன்லைன்லில் கற்க உதவும் மற்றும் விளக்கங்கள் , உதாரணங்கள் என எல்லா வகையிலும் நிவர்த்தி செய்ய கீழுள்ள அனைத்து தளங்களும் உங்களுக்கு உதவும் அவைகள் :
GRAPHICS TUTORIAL SITES:
PROGRAMMING TUTORIAL SITES:
  • Programming Tutorials



    ஆங்கிலம் மென்பொருள் பதிவிறக்கம்



    ஆங்கிலம் பேசி பழகுதல் என்பது இன்றைய இணைய உலகில் எவ்வளவோ எளிதாகிவிட்டது! ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்க விரும்புவர் அல்லது பேசி பயிற்சிப்பெற விரும்புவர் எவர்களுக்காயினும் இந்த குரல் வழி மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

    இந்த மென்பொருளின் பயன்பாடுகள் என்னென்ன?

    ஒரு ஆங்கிலச் சொல்லை அல்லது வாக்கியத்தை, ஆங்கிலத்தில் வாசித்துப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றை தட்டச்சி வாசிப்பதற்கான (Play) அழுத்தியை அழுத்தியவுடன் அது உரத்து வாசித்துக்காட்டும். ஆண் பெண் குரல்களில் வாசிக்கும் படி கட்டளையிட்டு பயன்பெறலாம்.

    இன்று பல ஆங்கில இணையத்தளங்கள் தாம் வழங்கும் செய்திகளை குரல் வழி கேட்பதற்கான வசதியையும் கொண்டுள்ளன. அவ்வாறு இல்லாத ஒரு இணையத்தளத்தின் செய்தியை வெட்டி ஒட்டி இங்கே கேட்கலாம்; கேட்டு ஆங்கிலப் பயிற்சியும் பெறலாம். பி.டி.எப், எம்.எஸ். வேர்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கொண்டு வாசிக்கமுடியும்.

    குறிப்பு:

    நீங்கள் எழுதிய ஆவணங்களை இந்த மென்பொருள் கொண்டு வாசித்து பயிற்சி பெறுவதானால்; முற்றுப்புள்ளி, முக்காற்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி இடவேண்டிய இடங்களில் அவற்றை சரியாக இட்டு வாசிக்கும் படி கட்டளையிடுங்கள். இல்லையெனில் இடைவிடாது ஒரே தொடராக வாசிக்கத்தொடங்கிவிடும். ஏனெனில் இந்த மென்பொருள் நிறுத்தற்குறிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு வாசிக்கக்கூடியது. நீங்கள் எழுதிய ஒரு சொல் சிலவேளை ஆங்கிலச் சொல் அல்லாத ஒரு சொல்லென்றால் அது அவற்றை சொல்லாக உணராமல் எழுத்தாக உணர்ந்து வாசிக்கும்.

    பதிவிறக்கம்:

    இந்த மென்பொருளை இங்கே அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளலாம். சிறிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கிக்கொண்டால் மேலும் தெளிவாகக் கேட்கும் வசதியைப் பெறலாம்.

    நன்றி Download As PDF

No comments: