பிளாகர் ரிப்ஸ்








பிளாக்கா Settingயில் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்-1

நண்பர்களே இந்த பதிவில் தங்களின் பிளாக்கர் செட்டிங்ஸ் தாங்கள் மேற்க்கொள்ள வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை தான் நான் கூறவுள்ளேன். இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயன்யுள்ளதாக உள்ளது. குறிப்பாக புதியதாக பிளாக்கர் தொடங்கியவர்களுக்கு இது மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்.

சரி சரி கோவ படாதிங்க...மேட்டருக்கு போலாம்.
முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர்



1.
Dashboard
Settings
Basic
செல்லுங்கள். 
  • பின்னர் Let search engines find your blog? என்பதில் என்பதை Yesதேர்ந்துதெடுத்துயிருக்க வேண்டும். இதில் Yes என்று தாங்கள் தேர்ந்தெடுத்தால் தங்களின் பிளாக் தேடல் இயந்திரங்களில் இடம்பெறும்.
  • Adult Content? என்பதில் NO என்பதை தேர்வு செய்துயிருக்க வேண்டும். இது என்னவென்றால் தங்கள் பிளாக் ஏதேனும் தவறான செய்கைகளை கொண்ட பிளாக்க என்பதை குறிக்கதான். அதனால் இதில் NO என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  •  அடுத்து GLOBAL SETTINGS என்று ஒன்று இருக்கும். இதில் Enable transliteration? என்பதில் ENABLE என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இது எதற்கு என்றால் தாங்கள் ஓர் பதிவை எழுதும் போது தமிழில் டைப் செய்ய மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்.
  • கடைசியாக SAVE என்று தந்து வெளியேறுங்கள்.
2.
Dashboard
Settings
Formatting
செல்லுங்கள். பின்னர்.....
  • Show at most என்பதற்க்கு செல்லுங்கள். இது எதற்கு என்றால் தங்களின் பிளாக்கின் முகப்பில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும், என்பதை குறிக்கிறது. இதில் Days என்பதை தேர்ந்தெடுத்தால் அன்றைய நாளில் எத்தனை பதிவுகள் பதிந்தீர்களோ அது மட்டும் தெரியும். POSTS என்பதை தேர்ந்தெடுத்தால் தங்களின் மொத்த பதிவில் இருந்து எத்தனை பதிவு தெரிய வேண்டும் என்பதை குறிக்கிறது

  • Convert line breaks என்பதில் தேர்ந்தெடுக்க வேண்டும். தங்களின் பதிவுகளில் READ MORE பட்டனை வைக்க போது, அதற்கு பயன்படுகிறது. இதில் NO என்று இருந்தால் தங்களின் பிளாக்கில் READ MORE முறை செயல்படாது. 

  • அடுத்து POST TEMPLATE என்பதில் ஓர் BOX ஒன்று இருக்கும். இது எதற்குயென்றால் தாங்கள் அனைத்து பதிவுகளிலும் ஓர் குறிப்பு அல்லது முக்கிய செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால், அந்த செய்தியை இந்த பெட்டியில் இடவும். ஏனெனில் ஓரு ஒரு வாட்டியும் இந்த போன்ற செய்திகளை டைப் செய்ய முடியாது. இதை தங்களின் பிளாகின் SIGN என்று கூட சொல்லலாம்.


3
Dashboard
Settings
Comments
செல்லுங்கள்....இதில்
  • Comments என்பதில் Show என்று தெர்ந்தெடுங்கள். இந்த முறை தங்களின் பிளாக்கில் வாசகர்கள் எழுதும் கமெண்ட்ஸ்களை தெரிவிக்க.

    • Who Can Comments என்பதில் ANYONE என்பதை தேர்வு செய்யுங்கள். தங்களின் பிளாக்கில் கமெண்ட்ஸ்களை யார் தெரிவிக்க வேண்டும் என்பதை தான் இது குறிக்கிறது. இதில் ANYONE என்பதை தேர்வு செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் கமெண்ட்ஸ்களை தெரிவிக்கலாம்.
    • Comment Form Placement என்பதில் மூன்று முறைகள் இருக்கும் இதை தாங்கள் காணலாம். முதலாவது FULLPAGE என்றுயிருக்கும் இதை தேர்வு செய்தால் தங்களின் கமெண்ட்கள் தனியே ஓர் பக்கமாக தோன்றும். POP UP WINDOW என்று தேர்வு செய்தால் தங்களின் கமெண்ட்ஸ்கான பெட்டி ஓர் சிறிய விண்டோ ஓப்பன் செய்யப்பட்டு அதில் தோன்றும், Embedded below postஎன்பதை தேர்வு செய்தால் தங்களின் பதிவிற்கு கீழே தோன்றும்.
    • Show word verification for comments? என்பது எதற்கு என்றால் தங்களின் பதிவுற்கு வாசகர்கள் கமெண்ட்ஸ்களை தெரிவிக்கும் போது உறுதி செய்ய சில பாஸ்வேர்டு போன்று கேட்டப்படும். இது வேண்டும் என்றால் YESஎன்று கூடுங்கள் தேவையில்லை என்றால் NO என்று தந்துவிடுங்கள்.. பெரும்பாலூம் NO தரபடும்.
    • COMMENT NOTIFICATION EMAIL என்பதில் தங்களின் இமெயில் முகவரியை இடவும். இப்படி செய்தால் தங்களின் பிளாக்கில் ஒவ்வொரு பதிவிர்க்கும் வாசகர்கள் இடும் கருத்துகள் தங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
    அனைத்தையும் மேற்கொண்ட பின்னர் சேவ் தந்து வெளியேறவும்.

    இந்த பதிவு தொடரும்..தங்களின் கருத்துகளுக்காக நான் காத்துகொண்டுயிருக்கிறேன்.




    பிளாக்கின் உள்ளளேயே படங்களைத் திறக்க டிப்ஸ்

    பிளாக்கர்தான் வலையுலகில் மிக அதிகமாக உபயோகபடுத்தபட்டு வருகிறது. அதில் மேன்மேலும் பல வசதிகளை உட்செலுத்தி அதனை மேலும் மெருகூட்டுவது சுவையான அனுபவம்தான்.

    பிளாக்கரில் ஒரு இடுகையில் இடப்பட்ட படத்தை பெரிதாக காண வேண்டும் என்றால் அந்த படத்தை கிளிக் செய்ய வேண்டும். அந்த படம் புதிய பக்கத்தில் திறக்கும். மீண்டும் இடுகைக்கு திரும்ப இணைய உலாவியில் உள்ள "Back" பட்டனை அழுத்தி மீண்டும் இடுகை பக்கத்துக்கு வரவேண்டும். இடுகை பக்கம் மீண்டும் திறக்க நேரம் எடுக்கும். இது சலிப்பான வேலைதான். இதற்கு பதிலாக நாம் இடுகை பக்கத்தில் இருக்கும் போது அதனுள்ளாகவே படம் திறந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். பார்வையாளருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

    நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியாதவர்கள் இந்த இடுகையில் இடப்பட்டுள்ள படங்களை கிளிக் செய்து பாருங்கள். வித்தியாசம் தெரியும். இந்த வசதியினை பிளாக்கரில் செய்வது எளிதான வேலைதான். ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் நிரல் இந்த வேலையை செய்யும்.

    கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் டெம்ப்ளெட்டில் பேஸ்ட் செய்ய வேண்டும்.

    1. கீழே உள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்.









    2. உங்கள் பிளாக்கரின் Dashboard -ல் Layout --> Edit HTML பக்கத்திற்கு செல்லவும் .
    பின்பு அங்கு தோன்றும் Code -ல்  என்ற வார்த்தையை தேடவும். அதன் கீழே நீங்கள் காப்பி செய்து வைத்துள்ள ஜாவா ஸ்கிரிப்ட் நிரலை பேஸ்ட் செய்து விடவும்.
    இப்போது SAVE TEMPLATE செய்து விடவும்.
    [தெளிவாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும் ]


    அவ்வளவுதான். வேறு எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. இனி உங்கள் இடுகை பக்கத்தை Refresh செய்யவும். அதில் உள்ள படங்களை கிளிக் செய்து பார்க்கவும். இந்த இடுகையில் உள்ளது போன்றே தோன்றும். ஏன் தாமதம் யோசிக்க வேண்டாம் ஆரம்பித்துவடுங்கள்.