தரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவது எப்படி?

இணையதள பாவனையாளர்கள் மத்தியில் தரவிறக்க தளங்கள் மிக பிரபலமாக உள்ளன. சினிமா, மென்பொருள் உள்ளிட்ட எந்தவகையான கோப்பு என்றாலும் அவற்றில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே அவற்றின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவற்றில் Rapidshare, Zshare,Megaupload, DepositFiles , DivShare போன்றவை முக்கியமானவை. இந்த தளங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இலவச சேவையையும், பல மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் கட்டண சேவைகளையும் அளிக்கின்றன.

இலவச சேவையை உபயோகிப்போருக்கு பல எரிச்சலூட்டும் விஷயங்கள் அந்த தளங்களில் இருக்கும். பல கேள்விகள் கேட்டு பல கிளிக்க்குகள் மூலம் விளம்பரங்கள் தெரிய செய்வதற்காக அதிக பக்கங்களை திறப்பார்கள். இறுதியில் Coutdown மூலம் தரவிறக்க லிங்க் பெறுவதற்கு குறைந்தபட்சம் முப்பது வினாடிகளாவது காத்திருக்க வேண்டி இருக்கும். அந்த வினாடிகள் ஓடும் போது வேறு வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வேறு பக்கங்களை பார்த்து கொண்டிருப்போம். மறந்து சில நிமிடங்கள் தாமதித்தால் "Download Link Expired" என்று பிழை செய்தியும் தோன்றும். தரவிறக்கும் ஆசையே போய் தளத்தை மூடிவிட்டு வந்து விடுவோம்.

இந்த இம்சைகளில் இருந்து விடுபட Skipscreen என்ற பயர்பாக்ஸ் நீட்சி (Extension) உதவுகிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவியில் நிறுவி கொள்ளுங்கள். இனி உங்கள் தரவிர்றக்க லிங்க்குகளை பயர்பாக்சில் திறங்கள். நீங்கள் மேற்கொண்டு எந்தவித கிளிக்குகளும் செய்யாமல் இந்த Skipscreen பயர்பாக்ஸ் நீட்சியானது உங்கள் தரவிறக்க லிங்க்கை கொண்டுவந்து தந்து விடும்.

இதுபற்றி மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் இந்த வீடியோவை பார்க்கவும்.
குறிப்பு : அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி கட்டுபாடுகளை சில தரவிறக்க தளங்கள் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து தப்பிக்க / தவிர்க்க இந்த நீட்சி உதவாது.
No comments:
Post a Comment