நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் Merriyam Webster அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.
அதாவது banyan tree என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது மரத்தின் பாகங்களை விளக்கும் படமும் கிடைக்கும்.
ஆரம்பக் கல்வி படித்து வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவும் இந்த ஆன்லைன் டிக்ஷனரி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதுபோன்று வாழ்வில் நாம் காணும் ஒரு 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன்லைன் அகராதியில் உள்ளன.
20,000 வார்த்தைகளுக்கு அது பயன்படுத்தப்படும் contractual அர்த்தங்களை, அருஞ்சொல் நிபுணர்களைக் கொண்டு தயாரித்துள்ளது.
இணையதளத்தின் Side Bar இல் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி, விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த Online அகராதி.
நமக்கு லிவர் தெரியும், பெருங்குடல், சிறுகுடல் போன்ற வார்த்தைகளெல்லாம் நமக்கு தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும்? விளக்கத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா உடனே செல்லுங்கள்http://visual.merriam-webster.com/ இணையதளத்திற்கு.
1996-ம் ஆண்டு Visual Dictionary என்ற புதிய அகராதி CD களில் வந்தது. இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் வெளியானது. அப்போது முதல் பல்வேறு விதத்தில் மேம்பட்ட dictionary கள் CD களில் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் இதனை கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளது மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம்.
No comments:
Post a Comment