சின்ன சின்ன தகவல்கள்
ஒரே இடத்தில் அனைத்து டிக்ஷனரிகளும்: ஆங்கிலச் சொல் ஒன்றின் பொருள் வேண்டுமா? இணையத்தில் பல டிக்ஷனரிகள் உள்ளன. இவற்றின் தளங்கள் சென்று தேடலாம்.
ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம்.
கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும்.
இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன் கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள் தேடி வரிசையாகத் தரும்.
இணைய வேகம் அறிய: உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்து காட்டும்.
கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
சீதோஷ்ண நிலை அறிய: ஒரு ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எதன் வழி அறியலாம்? அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம்.
பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள் நமக்கு உதவுகிறது. சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத் தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த சுற்று வேலை எல்லாம் வேண்டாம்.
கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா? Madurai weather என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
உடன் கிடைக்கும் திரையில் மதுரையின் அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம் எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம் காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்று காட்டப்படும்.



No comments:
Post a Comment