Monday, June 13, 2011

புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.



நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கேமிரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கி  நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து  மென்பொருளை இயக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் + என்ற பொத்தானை சொடுக்கி படத்தை பெரியதாக்கலாம்,இடது பக்கம் இருக்கும் – என்பதை சொடுக்கி படத்தை   சிறியதாக்கலாம். எந்த அளவு நமக்கு சரியாக இருக்கிறதோ அந்த அளவில் தேர்ந்தெடுத்துக்கொண்டு Quick Save அல்லது Save Resized Photo என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம், கண்டிப்பாக கணினி பயின்றுவரும் நண்பர்களுக்கு புகைப்படங்களை  சிறியதாக்கவும் பெரியதாக்கவும் இந்த  மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.

No comments: