Friday, May 27, 2011

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க



இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.
 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.
 
My Computer à C Drive à WINDOWS à system32 à drivers à etc
 C:\WINDOWS\system32\drivers\etc ]
இப்போ “etc“ என்றதில் "HOSTS" எனும் ஒரு கோப்பு [file] காணப்படும்.
இதனை Double Click செய்து அல்லது Right Click செய்தோ ஒரு NotePad இல் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ இவ் NotePad இன் இறுதியில் "127.0.0.1 localhost" என்பது காணப்படும். இதன் கீழே நீங்கள் தடைசெய்ய விரும்பும் தளத்திற்கான முகவரியை 127.0.0.2என்ற இலக்கத்திற்குப் பின்னால் கொடுக்கவும்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite.com
இவ்வாறே மேலும் பல தளங்களைச் சேர்க்க விரும்பினால் 127.0.0.2 என்ற எண்ணில் உள்ள இறுதி இலக்கத்தை ஒவ்வொன்றாக அதிகரித்து எழுதவேண்டியதுதான்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite01.com

பின்னர், “Save” என்பதைக் கொடுத்து அவ்NotePad ஐ சேமித்துக்கொள்க.
இனிமேல் உங்கள் கணணியானது விரும்பத்தகாத இணையத்தளங்களுக்கு செல்வதை தடைசெய்யும்.

No comments: