Wednesday, March 30, 2011

தொலைத் தூர கணினியை இயக்க இலவச மென்பொருள்


என் அலுவலக்கத்தில் கணக்கியல் சம்மந்தமான புதிய மென்பொருள் ஒன்றை கணினியில் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இதில் சில தவறுகள் பயன்பாட்டில் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. ஆனால் இது குறித்து தலைமை இடத்தித்தில் இருந்து அறிவுறுத்தியும் அதை மேம்படுத்த முடியவில்லை. பிறகு அவர்களிடத்தில் இருந்தே அதாவது தொலைதூரத்தில் இருந்தே கணினியின் தகவல்களை பெற்றார்கள், மாற்றினார்கள், பயிற்சியும் கொடுத்தார்கள். அவர்களிடத்தில் இருந்தே இங்குள்ள கணினியை இயக்கினார்கள்.

இச்செயல் பிரமிப்பைக் கொடுத்தது. படித்தை கேட்டதை என் கண்முன்ணாலேயே விட்டாலச்சாரியார் படம் போலவே நிகழ்ந்தது. நவீன உலகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாலும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து இக்கணினியை இயக்குவது அதிசயம் தான்.



சுமார் 6 கோடி பேர்  50 நாடுகளில் இம்மென்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.


ஆம். டீம் வீவர் மென்பொருளோ அது. இலவசமாகத் தருகிறார்கள். எந்த இரண்டு கணினியை இணைக்கப் போகிறோமோ இவ்விரண்டு இடத்திலும் இம்மொன்பொருளை இணைய இணைப்புடன் கணினியில் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

நமது கணினியில் நிறுவும் போதே உங்களுக்கான பாஸ்வேர்டை கேட்கிறது. பிறகு அம்மென்பொருளே ஒரு ஐடி எண்ணையும் கொடுக்கிறது.(படம்.1.)


தொலைதூர தொடர்பாளரையும் நாம் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவி இருக்கச்செய்ய வேண்டும். டீம் வீவர் மென்பொருளின் அளவு 2.7 எம்பி மட்டுமே.

அவர்கள் நிறுவிய பின்னர் தொலைதூர கணினியில் கொடுக்கப்பட்ட ஐடி எண்ணை நமது கணினியில் தட்டச்சு செய்து அவருடன் இணைப்புக் கொள்ளலாம். (படம்.2.)


தொலைத்துற தொடர்பாளரின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் இணைப்புக் கொள்ளமுடியாது. அதனால் கணினிக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. கோப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம், பரிமாறும் போது சாட்டிங்கும் செய்யலாம்.


வீட்ட்டுக் கணினியில் கோப்பு இருக்கிறதே பென் டிரைவரும் மறந்தாச்சே என்ற கவலை வேண்டாம். உங்கள் செல்போனிலேயே வீட்டை தொடர்பு கொண்டு கணினியை இயக்கச்செய்யச்சொல்லி , உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விடலாம்.

நாம் கர்சரை ஆட்டினால் வேறு கோப்பை திறந்தால், அந்த குரங்கை கையை சும்மாவைத்துக் கொண்டு அமைதியாக இருக்கச்சொல்லுங்கள் என்று மறுமுனையில் இருந்து சொல்லக் கேட்பது நகைச்சுவையே.


அவர்களுக்கு அங்கிருந்தே பயிற்சியும் கொடுக்கலாம்.

இவ் அனுபவத்தைப் பெற இங்கே சொடுக்கி பதிவிறக்கம் செய்து இவ்வசதியை பெறுங்கள்.

No comments: